கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவராவார்.
அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த இளைஞர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.