இத்தாலிய மற்றும் ஜேர்மன் கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கான போலி ஆவணங்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (10) காலை இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் நீர்கொழும்பு கொச்சிக்கடையில் வசிக்கும் 38 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
இவருடைய பயணப் பொதியில் போலியான 09 இத்தாலியக் கடவுச்சீட்டுகள் மற்றும் 09 விசா சீட்டுகள் , ஜேர்மன் கடவுச்சீட்டு மற்றும் விசா சீட்டு என்பன இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் இந்த போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டுகளைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல் குற்றச்செயலில் ஈடுபடும் நபராக இருக்கலாம் என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் .
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வந்த அனைத்து போலி ஆவணங்களுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.