நாளை(15) முதல் ஒரு வார காலத்திற்கு ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வன்முறைகளை தடுக்கவும், அமைதியை பேணும் முகமாகவும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை, ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.