குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமையாளர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு சுமார் இரண்டரை மணிநேரம் போராடி தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.