ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பங்காளி கட்சிகளுடன் ஒப்பந்தநம் கைச்சாத்திடப்பட்டது.
அதற்கமைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்ரஸ், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தயாசிறி ஜயசேகர தரப்பு உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.