சீரற்ற காலநிலை காரணமாக 27ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் மீண்டும் பரீட்சை ஆரம்பிக்கப்படும் எனவும், நாளைய தினம் இடம்பெறவுள்ள பாடங்களின் படி பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சை நடைபெறாத நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.