முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் எனதெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே தனக்கு உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள் அரசமைப்பின் கீழ் எனக்குஅதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறுவதால் ஜனாதிபதிக்கு பலாபலன்கள் கிட்டும் என்றால் நான் அங்கிருந்து வெளியேற தயார் என குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச நான் பலவந்தமாக அந்த வீட்டை பிடித்துவைத்திருக்கவில்லை அங்கிருந்து வெளியேற தயார் என குறிப்பிட்டுள்ளார்.