இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (ஞாயிற்க்கிழமை) ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இன்னினையில் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் 8ஆவது தடவையாக மோதவுள்ளதோடு இதுவரையில் ஆசிய கிண்ணத்தை இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும் கைபற்றியுள்ளது.
இதேவேளை இன்றைய போட்டியிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்ஷன உபாதை காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சஹான் ஆரச்சிகே அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அத்துடன் உபாதை காரணமாக இந்திய அணியின் அக்ஷர் பட்டேல் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 16 ஆவது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் கடந்த ஒகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.