இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்றைய தினம் திங்கட்கிழமை நியமிக்கப்பட்டிருந்தனர்.