இந்திய பிரதமராக 3 ஆவது முறையாகவும் நரேந்திர மோடி இன்று பதவியேற்பு!

மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தனது 73 ஆவது வயதில், நரேந்திர மோடி இன்றிரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பதவியேற்கவுள்ளதாக இந்தியாலின் ஜனாதிபதி மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்போது, மத்திய அமைச்சர் குழுவின் ஏனைய உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிகழ்வுக்கு 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர், மாலைத்தீவு ஜனாதிபதி, மொரிஸியஸ் பிரதமர்த், சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி, நேபாள பிரதமர், பூட்டான் பிரதமர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கு, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவினால் இன்று விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட 8000க்கும் அதிகளவானோர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியேற்புக்காக டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றும், நாளையும் டெல்லி பொலிஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையை அண்மித்த பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *