இங்கிலாந்தில் நேஏற்ரு முந்தினம் (02) நடைபெற்ற உள்ளூரட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியான “Labour party” அதிக இடங்களை கைப்பற்றி முன்னணியில் உள்ளது.
இங்கிலாந்தின் 107 பிரதேசசபைகளுக்கான தேர்தலில் இதுவரை 103 பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. லண்டன் உட்பட மீதமுள்ள 4 பிரதேச சபைக்கான வாக்கு எண்ணும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.
இது வரை வெளிவந்த தேர்தல் முடிவுகளின் படி 48 பிரதேச சபைகளை தன்வசமாக்கியுள்ளது “Labour party” என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆளும்கட்சியான “Conservative party” தம்வசம் இருந்த 10 பிரதேச சபைகளை இழந்ததோடு, 455 பிரதேச செயலர்களையும் இழந்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு பாரிய தோல்வியை சந்தித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.