இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு போலி கடவுச்சீட்டில் சென்̀றவர் கைதானார்!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டுக்கு வருகை தந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார். 

சந்தேக நபர் லண்டனிலிருந்து இன்றைய தினம் காலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

இதன்போது விமான நிலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடந்த 2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *