அரச நிதியை கையாள்வதில் ஏற்படும் சட்டச்சிக்கல்களை தீர்த்துவைக்கும் நோக்குடன் மாவட்டங்கள் தோறும் தனியான குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
நீதி அமைச்சாலேயே இந்தக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. துறைசார் நிபுணர்கள் இந்த குழுவில் அங்கத்தவர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
முதல் கட்டமாக கொழும்பு, கம்பஹா, பொலநறுவை, மொனராகலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் இந்த குழுக்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.