”அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளத்தை புத்தாண்டை முன்னிட்டு இன்று (08) திங்கள் முதல் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(07) கேகாலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகரிக்கப்பட்ட தொகை மாத்திரம் 13 பில்லியன் ரூபாயை அண்மித்துள்ளதாகவும் ” தெரிவித்துள்ளார்.