அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபராவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பைடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜோ பைடனின் விலகலால் அதிபர் தேர்தலில் புதிய சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.