இந்திய படைகளுக்கு எதிராக சாத்வீக முறையில் தன் உயிர் பிரியும் வரை உண்ணா நிலைப் போராட்டம் மேற்கொண்டு தியாக மரணமடைந்த தியாகி அன்னை பூபதி அவர்களின் நினைவு நாள் (ஏப்ரல் 19) இன்றாகும்.
இலங்கைத் தீவில் வந்திறங்கிய இந்தியப்படைகள் தமிழர் தாயகப்பகுதிகளில் மேற்கொண்ட அட்டூழியங்கள், சொத்துக்கள் சூறையாடுதல், கைதுகள் போன்றவற்றை நிறுத்தி தமிழர் தாயகப் பகுதியை விட்டு வெளியேற வலியுறுத்தி 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் உண்னா நிலைப் போராட்டம் மேற்கொண்டு 32 ஆம் நாள் தன் உயிரை தியாகம் செய்திருந்தார் அன்னை பூபதி அவர்கள்.