இன்று(31) தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியானதும், அர்த்தமுள்ளதும், அமைதியானதுமான தீபாவளியாக அமைய வாழ்த்துக்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிர வைக்கட்டும். இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் நாம், கட்டமைப்பு ரீதியான பாரபட்சங்கள் மற்றும் விளிம்பு நிலைக்குள்ளாக்கப்படல் என்பவற்றுக்கு எதிராகப் போராடுபவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.
அனைவரும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரித்தை அனுபவிக்கக் கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.
‘வளமான தேசம் – அழகான வாழ்க்கை’ என்ற எமது அரசியல் கொள்கையின் மூலம் எங்கள் கூட்டு இலக்கானது அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், அனைவரையும் உள்ளடக்குவதை உறுதி செய்வதும் ஆகும்.
இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், புதுப்பித்தலையும் தரட்டும்.