இலங்கையின் 10வது பாராளுமன்றிற்கான அமைச்சர்கள் நியமன நிகழ்வு இன்று(18) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முதலாவதாக ஹரிணி அமரசூரிய அவர்கள் பிரதமராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து ஏனைய அமைச்சுப்பதவிகளுக்கான அமைச்சர்கள் நியமைக்கப்பட்டனர்.
- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களும்,
2. நகர அபிவிருத்தி, கட்டுமானத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக்க அவர்களும்,
3. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜேபால அவர்களும்,
4. போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பிமல் ரத்நாயக்க அவர்களும்,
5. புத்தசாசனம் ,மத மற்றும் கலை ,கலாசார விவகாரங்கள் அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்களும்,
6. சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களும்,
7. விவசாயம்,கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சராக கே.டி. லால்காந்த அவர்களும்,
8. பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக சமந்த வித்யாரத்ன அவர்களும்,
9. இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே அவர்களும்,
10. வர்த்தகம்,வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு,கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க அவர்களும்,
11. தொழில் அமைச்சராக பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களும்,
12. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களும்,
13. வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் தொழில் அமைச்சராக விஜித ஹேரத் அவர்களும்,
14. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சராக சந்தன அபேயரத்ன அவர்களும்,
15. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக ஹர்ஷன நாணயக்கார அவர்களும்,
16. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும்,
17. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே அவர்களும்,
18. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்னெத்தி அவர்களும்,
19. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கிருஷாந்த சில்வா அபேசேன அவர்களும்,
20. வலுசக்தி அமைச்சராக குமார ஜெயக்கொடி அவர்களும்,
21. சுற்றாடல் அமைச்சராக தம்மிக்க பட்டபெந்தி அவர்களும்,
இன்று திங்கட்கிழமை (18) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.