அத்தியாவசிய சேவைகளாக மேலும் சில துறைகளை பிரகடனப்படுத்தப்பட்டு நேற்று (17) இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 ஆம் பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
இதன்படி, மின்சார விநியோகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், எரிபொருள் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நோயாளர்களை பராமரித்தல், பாதுகாத்தல், போஷாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.