ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செவ்வாய் கிழமை (30) ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்ட ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணை குறித்த ஆளுங்கட்சி குழு கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் முன்வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களும் அறிவித்துள்ளனர்.