ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சந்திரசேன அநுராதபுரம் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவும்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து அமைச்சர் கஞ்சன விஜேசேகர நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்கவும்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து அமைச்சர் ரமேஷ் பத்திரன நீக்கப்பட்டுள்ளதுடன், புதிய தொகுதி அமைப்பாளராக இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டீ சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.