திருகோணமலையின் வெருகல் பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 320 குடும்பங்களுக்கு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரளவும் இணைந்து நேற்று முன்தினம் புதன்கிழமை உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
அகம் தன்னார்வ அமைப்பின் அனுசரணையுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை அவர்கள் வழங்கி வைத்தனர்.
கடந்த வாரம் முழுவதும் வெருகல் பிரதேசத்தில் பெய்த கடும் மழையால் கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதுடன், அப்பிரதேசத்தில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 968 பேர் வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கினர்.
இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அவர்களின் தேவைகளையும் அந்தக் குழுவினர் கேட்டறிந்துகொண்டனர். இந்நிலையில், இந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் பணிப்புரை வழங்கப்பட்டது.