வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்றுமுன்தினம் மாலை வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் குறித்த கைதிக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.