வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் முகமாக “நடந்தாய் வாழி வழுக்கை ஆறு” எனும் தொனிப்பொருளில் ஒரு நடைபயணம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 8 மணிக்கு யாழ். தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலி நோக்கி சென்றது.
இந்த பயணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர் ஸ்ரீஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.