உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்களையும் பொருளாதார தடைகளையும் இலங்கை ஆதரிக்காது எனவும், ரஷ்யாவுக்கு இலங்கை நட்பு நாடாகவே உள்ளதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவில் இடம்பெற்ற ரஷ்ய – இலங்கை வர்த்தக தரப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறிய ஜனித்த லியனகே, இக்கட்டான காலங்களில் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய உதவிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.