மறைந்த தமித்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்:

மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,, நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நலக் குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு தனது 91ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில், சம்பந்தனின் மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சம்பந்தன் எனது பழைய நண்பர் . நாங்கள் பல நாட்கள் பல்வேறு விடயங்களை குறித்து கலந்துரையாடியுள்ளோம். அவரது மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பாகும்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதலை கூற விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *