பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்திய நீதிமன்று!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உயர்நீதிமன்றம் இன்று (08) உறுதி செய்துள்ளது.

2013 ஆம் ஆண்டு வர்த்தகர் மொஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் 4 பொலிஸ் அதிகாரிகள் என ஆறு பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனையை விதித்திருந்தது.

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளதுடன் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *