பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சட்டமூலம் நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
எனினும் அந்த சரத்துகள் திருத்தப்பட்டால் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.