விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவியதாக தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த முன்னாள் சுங்க அதிகாரி கந்தையா யோகநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரான கதிர்காமநாதன் மகிந்தன் அல்லது வெண்ணயனன் என்பவருக்கு உதவியதாகத் தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
எனினும், இந்த வழக்கில் இருந்து முன்னாள் சுங்க அதிகாரி கந்தையா யோகநாதனை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று உத்தரவிட்டார்