மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் (Burkina Faso) உள்ள பார்சலோகோ பகுதியில், மக்கள் மீது ஆயுதக்குழு ஒன்று சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 200 பேர் உயிரிழந்ததாகவும், 140 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில், இத் தாக்குதலுக்கு அல்கொய்தா அமைபினரோடு தொடர்புடைய அமைப்பு ஒன்று உரிமை கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.