இங்கிலாந்து மக்களின் வாழ்நாள் குறித்து உலக மக்களின் சுகாதார ஆராய்ச்சி மையம் பல தரவுகளை ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பிரித்தானியாவில் – 10,62,334 பேர் சிகிச்சை பெற தேவையான பொருளாதார வசதி இல்லாததால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் படி,
2011-ஆம் வருடத்திற்கு பிறகு இங்கிலாந்தில் உயிரிழந்தவர்களில் பலருக்கு வறுமை, அரசின் சிக்கன நடவடிக்கைகள், கோவிட் பெருந்தொற்று ஆகியவை மரணத்துக்கான காரணமாக அமைந்துள்ளது.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏழை மக்கள் புற்று நோய், இருதய நோய்கள் மற்றும் பிற நோய்களில் இருந்து தங்களை பாதுகாக்க முடியாமல் உயிரிழந்துள்ளனர்.
2011இல் இருந்து 2019 வரையிலான காலத்தில் 10,62,334 பேர் சிகிச்சை பெற தேவையான பொருளாதார வசதி இல்லாததால் உயிரிழந்துள்ளனர் எனவும், 2020ல் மட்டும் 1,51,615 மரணங்கள் நிகழ்ந்ததாகவும், இதில் பெரும்பாலானவை கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ளன. என அவ் அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.