பிரித்தானியாவில் தொடர் சோகம் – 8 வயது சிறுமியும், 31 வயது பெண்ணும் தீ விபத்தில் பலி!

பிரித்தானியாவின் Huddersfield என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 வயது பெண் மற்றும் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு 10 வயது சிறுமி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Huddersfield என்ற பகுதியில் Leeds road இல் ஏற்பட்ட குறித்த தீ விபத்து தொடர்பாக இன்று அதிகாலை 2.20 am மணியளவில் அவசர சேவை இலக்கத்திற்கு அழைக்கப்பட்டதினை தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்பு அதிகாரிகள், மற்றும் West Yorkshire பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தி வீட்டினுள் இருந்த 31 வயது பெண் உட்பட 8 வயது மற்றும் 10 வயது சிறுமிகள் இருவருமாக மூவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அதில் 8 வயது சிறுமியும், 31 வயது பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்து தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *