பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் நடத்தப்பட்ட கோடைகால யோகா மற்றும் நடன வகுப்பில் நுழைந்து இளைஞர் ஒருவர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் தற்போது இரு சிறார்கள் கொல்லப்பட்டுள்லதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 9 சிறார்கள் காயங்களுடன் தப்பியுள்ள நிலையில், 6 பேர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். சிறார்களை பாதுகாக்கும் பொருட்டு தாக்குதல்தாரியை தடுக்க முயன்ற இருவரும் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது 25 சிறார்கள் அந்த முகாமில் இருந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் ஒரு திகில் பட பாணியில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கலக்கத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த கோர சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை பொலிசார் சம்பவயிடத்திலேயே சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.