ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்போது உக்ரைன் மீது பயன்படுத்தும் KH – 101 ஏவுகணைகளை பிரிட்டிஷ் தீவுகளை நோக்கி திருப்பிவிட முடியும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைன் அளவுக்கு வான் பாதுகாப்பில் பிரித்தானியா இல்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ள நிலையில், இதுபோன்ற ஏவுகணைகளை ஏவினால் அத்தகைய தாக்குதலுக்கு எதிராக பிரித்தானியாவால் எதிர்வினையாற்ற முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், மேற்கு ரஷ்யாவில் இருந்து விமானமூடாக 500 கிலோ வெடிபொருளுடன் விடுவிக்கப்படும் ஏவுகணையானது, 90 நிமிடங்களில் லண்டனை வந்தடைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவின் Kh-101 ஏவுகணையானது ஐரோப்பாவின் எந்த பகுதியையும் தாக்கும் திறன் கொண்டது என்றும், மணிக்கு 600 மைல்கள் வேகத்திலும் பயணிக்கக்கூடியது என்றும் குறிப்பிடுகின்றனர்.