நாட்டில் அமைதியின்மையை ஊக்குவிக்கும் முகமாக சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்ட இருவருக்கு பிரிட்டனில் சிறை!

இங்கிலாந்தின் சில பகுதிகளில் பரவலான குழப்பத்தின் போது சமூக ஊடகங்களில் வெறுப்பைத் தூண்டியதற்காக இரண்டு ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில், 26 வயதுடைய Tyler Kay "முற்றிலும் வெறுக்கத்தக்க, இனவெறி” இடுகைகளை X தளத்தில் வெளியிட்டதற்காக அவருக்கு 38 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மற்றைய நபரான 28 வயதுடைய Jordan Parlour இன வெறுப்பைத் தூண்டும் வகையில் எழுதப்பட்ட விஷயங்களை Facebook இல் வெளியிட்டதற்காக அவருக்கு 20 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை,பிரித்தானிய பிரதம மந்திரி Sir Keir Starmer சமூக ஊடகங்கள் "சட்டமில்லாத மண்டலம்" அல்ல என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *