இந்த மாதம் இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பூநகரி – கௌதாரிமுனையில் அதானி குழுமம் அமைக்கும் காற்றாலை நிர்மாணப் பணிகள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பார் என்று தெரிய வருகின்றது.
ஓகஸ்ட் மாதத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவார் என்று கூறப்பட்டது. அண்மையில், இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் மோடியின் வருகையை உறுதி செய்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை தொடர வைப்பதில் இந்திய தலையீடுகள் அதிகம் உள்ளன என்பதுடன், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இணைக்கும் முயற்சியிலும் தொடர்ந்தும் இந்தியா செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.