தன்னை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (12) அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த ரிட் மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதவான் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.