தீர்வு விடயத்தில் தேர்தல் வெற்றிகளை பார்க்க முடியாது!

தமிழரசுக்கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏனையவர்கள் ஒத்துவரவேண்டும் என்று சொல்வது முறையற்றசெயல். தேர்தல்வெற்றிகளை வைத்து தீர்வு விடயத்தை பார்க்கமுடியாது. சுமந்திரனுக்கும் இது தெரியும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழர்களை பொறுத்தவரை பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. எனவே இனப்பிரச்சனை சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவிற்கு ஆதரவாக மற்றக்கட்சிகள் செல்வதென்பது சாத்தியமில்லை.

ஒன்றாக இணைந்து ஒருமேசையில் இருந்து விவாதித்து ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் போதே அது வலுவானதாகவும் பலமானதாகவும் இருக்கும்.   அதன்மூலமே புதிய அரசியல் சாசனத்தில் எவ்வாறான கோரிக்கையினை முன் வைக்கலாம் என்ற கடமைப்பாட்டை நாம் செய்யமுடியும்.

தமிழரசுக்கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏனையவர்கள் ஒத்துவரவேண்டும் என்று சொல்வது முறையற்றசெயல். தேர்தல்வெற்றிகளை வைத்து இதனை பார்க்கமுடியாது.

ஒற்றுமையான தீர்வுதிட்டத்தை முன்வைக்கின்ற போதே எமது மக்களும் அதை விரும்புவார்கள். அந்த பலத்தின் மூலமே அரசாங்கத்தின் பார்வையை எமதுபக்கம் திருப்ப முடியும்.தனித்தனியாக செயற்பட்டால் அதைவைத்து அரசியல் செய்யும் நிலையில் புதிய அரசு ஈடுபடும்.

பிரிந்துசென்றதால் நாம் பல பாடங்களை கற்றிருக்கிறோம். எனவே நாங்கள்செய்வோம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது சாத்தியற்ற ஒன்றாகவே நான் பார்க்கிறேன். சுமந்திரன் அவர்களுக்கும் இது நன்றாக தெரியும். அவரும் ஒத்துவருவார் என்று நினைக்கிறேன். தமிழரசுக்கட்சியும் ஒத்துவரும் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *