திருகோண்மலையில், எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தம்பலகாமம் – கூட்டாம்புளி பகுதியில் சடலம் காணப்படுவதாக அப்பகுதி விவசாயிகளினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்று (20) மாலை இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலத்துக்கு அருகே அடையாள அட்டை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் உயிரிழந்த நபர் தம்பலகாமத்தைச் சேர்ந்தவர்; அன்புவழிபுரத்தில் திருமணம் முடித்தவர்; சமீப காலமாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தவர்; திருமண நிகழ்வொன்றுக்காக சில நாட்களுக்கு முன்னர் சொந்த மண்ணுக்கு வந்திருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது.

இந்த சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *