”தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் “தாதியர் அரசியலமைப்புத் திருத்தம்” தொடர்பான வரைவை இரகசியமாகத் தயாரித்துள்ளமையை கண்டித்து, சுகாதார அமைச்சுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் நாளை நாடளாவிய ரீதியில் வைத்திய சேவைகள் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.