ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேந்திரன் தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதி முடிவெடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சியானது இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ள முன்னர் அக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரான அரியநேந்திரன் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 11ஆம் திகதி கட்சியின் மத்திய குழு கூடி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளது. அதன் பின்னரே கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.