தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்றைய தினம் திங்கட்கிழமை (7) சசிகலா ரவிராஜ் கையொப்பமிட்டதன் மூலம் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழரசு கட்சியில் சுமந்திரனின் அடாவடித்தனம் மற்றும் தன்னிச்சையான முடிவுகள் காரணமாக அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட சிலர் பொறுப்புக்களிலிருந்தும்,, பலர் கட்சியை விட்டும் வெளியேறிவரும் நிலையில் சசிகலா ரவிராஜும் தனக்கு ஆசனம் வழங்க மறுத்ததை தொடர்ப்து அங்கிருந்து வெளியேறி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.