சோமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை கார்குண்டுத்தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சோமாலிய தலைநகரில் கடற்கரையோரத்தை அண்மித்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலில் சுமார் 63 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.