சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் கடந்த வியாழக்கிழமை சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 5 டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்கள் ஐவரையும் கைது செய்துள்ளனர்.
அண்மைக் காலமாக சட்டவிரோத மணல் கடத்தல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.