கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் தீப்பிடித்த சம்பவம் குறித்து துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து கொழும்புதுறைமுகத்திற்கு வந்த சுவிட்சர்லாந்திற்கு சொந்தமான கப்பலிலேயே தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
குறித்த கப்பல் கொழும்புதுறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் திடீர்என தீப்பிடித்ததை தொடர்ந்து துறைமுக தீயணைப்பு பிரிவினர் உடனடியாக தீயை அணைத்துள்ளனர்.