குவைத்தில் கைது செய்யப்பட்டிருந்த 24 இலங்கையர்கள் விடுதலை:

குவைத்தில் கைது செய்யப்பட்ட இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குவைத் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டினை தொடர்ந்து குறித்த குழுவினர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் 26 பேர் குவைத் பொலிஸாரால் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையிலேயே, குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் தலையீட்டின் பேரில், 24 பேர் நேற்றிரவு விடுவிக்கப்பட்டதாகவும், ஏற்பாட்டுக் குழுவில் உள்ள இருவர் தொடர்ந்தும் பொலிஸ் காவலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *