கிளிநொச்சியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செனிவிரட்ன எனவும், அவருக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகியுள்ளது எனவும் அவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.