கொழும்பு -10 டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் இன்று (06) அதிகாலை முதல் மூடப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தலைமையகத்தின் அனைத்துத் திறப்புக்களும் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.