யாழ் மாவட்டத்திற்கு இன்று (02) விசேட விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தாளையடி – மருதங்கேணி பகுதியில் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை நன்னீராக மாற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி பல்வேறு அமைப்புகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று தெரியவருகின்றது.