ஐநா ஆபத்து பட்டியலில் சேர்க்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க உக்ரேனிய தளங்கள்:

ரஷ்யாவுடனான போர் காரணமாக உக்ரைனின் இரண்டு நகரங்களில் உள்ள முக்கிய வரலாற்று தளங்கள் அழிவின் அபாயத்தில் இருப்பதாக ஐநாவின் பாரம்பரிய அமைப்பான Unseco தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக Kyiv மற்றும் Lviv ஆகிய பகுதிகளில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உக்ரேனிய தளங்கள் ஐநா ஆபத்து பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பட்டியலில் உள்ள தளங்களைச் சேர்ப்பது ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு அவர்களின் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் பொறுப்பை நினைவூட்டுவதாகவும் மேலும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிக்கு “கதவைத் திறக்கும்” என்றும் அது மேலும் கூறியது.

இதேவேளை, சேதத்தைத் தடுக்க தனது ஆயுதப் படைகள் “தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை” எடுத்து வருவதாக ஐ.நா.விடம் ரஷ்யா உறுதியளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *